மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு தன வரவு சிறப்பாக இருக்கும்.
வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும். கடன் கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் தேவையற்ற வீண் அலைச்சல் இருக்கும். பண வரவை விட செலவு தான் அதிகமாக இருக்கும். முக்கியமான செயலை செய்யும்போது யோசித்து நிதானமாக செய்ய வேண்டும். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். புதுப்புது விஷயங்களில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பெண்களுக்கு கையில் காசு பணம் அதிகரிக்கும். காதல் விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
மாணவர்கள் மன தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்விக்கான செலவை தயார் செய்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மட்டும் மஞ்சள் நிறம்.