கேப்டன் பகுதியில் உக்ரைன் நாட்டு ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து ரஷ்ய இராணுவத்தின் குடும்பங்கள் பீதியில் தப்பித்து ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அண்டோனிவ்ஸ்கி மற்றும் கவோவ்ஸ்கி பாலங்களை உக்ரைன் ராணுவம் சில தினங்களாக பலமாக தாக்கி வருகின்றது. இந்த சூழலில் ஆண்டோனிவ்ஸ்கி பாலம் நேற்று இருபுறமும் சூழப்பட்டு உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த பாலம் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கிய விநியோக பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தின் இந்த தாக்குதலால் எழுந்துள்ள பீதியை தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தின் குடும்பங்கள் கெர்சன் நகரத்தை விட்டு வேகமாக வெளியேறத் தொடங்கி இருப்பதாக அந்த பகுதியில் மாநில நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உக்ரைன் படையினரின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் பீதியடைய தொடங்கி இருக்கின்றது என்று மற்றொரு அறிக்கை கூறியுள்ளது.