இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் ரஷ்யா விண்வெளி ஆய்வு மையமும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த நான்கு பைலட்கள் ரஷ்யாவிலுள்ள காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்திற்குச் (GCTC) சென்றுள்ளனர்.
இந்த நால்வரும் 12 மாதங்கள் நீடிக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்கிறார்கள். இந்தப் பயிற்சியில், சோயுஸ் (Soyuz) ஆளில்லா விண்கலத்தின் அமைப்புகளைப் பற்றியும் அவர்களுக்கு விரிவாகக் கற்றுக்கொடுக்கப்படும்.
மேலும், விண்வெளி பயணத்தின்போது அசாதாரணமான நிலையில் தரையிறங்க நேர்ந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். விமானிகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்திலேயே (GCTC) அளிக்கப்படும்