நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட வாழை, மிளகாய் போன்ற பயிர்கள் நீரில் முழ்கியுள்ளதது. இந்நிலையில் நேற்று தோட்டக்கலைத்துறை இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர் பரிமேழகன், பாபநாசம் தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் உள்ளிட்ட பலர் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் அவர்கள் கூறியதாவது. வெள்ளப்பெருக்கு குறைந்த உடன் தோட்டக்கலை பயிர்களின் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அறிக்கை தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும். பின்னர் சென்னையில் உள்ள தோட்டக்கலை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று வழங்கப்படும் என கூறியுள்ளனர்.