இன்றைய தின நிகழ்வுகள்
கிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது.
355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.
1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார்.
1812 – இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது.[1]
1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் புவேர்ட்டோ ரிக்கோவின் மயாகுவேசு நகரினுள் நுழைந்தனர்.
1920 – லாத்வியாவின் அதிகாரத்தை உருசியாவிடம் வழங்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
1945 – கிராக்கோவ் நகரில் போலந்து மக்கள் யூதர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தினர்.
1952 – உசைன் பின் தலால் யோர்தானின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
1960 – சாட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1961 – இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீசப் பகுதிகளான தாத்ரா, நகர் அவேலி ஆகியன இணைக்கப்பட்டு தாத்ரா மற்றும் நகர் அவேலி என்ற ஒன்றியப் பகுதி ஆக்கப்பட்டது.
1962 – வஸ்தோக் 3 விண்கலம் பைக்கனூரில் இருந்து ஏவப்பட்டது. அந்திரியன் நிக்கொலாயெவ் நுண்ணீர்ப்பு விசையில் மிதந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1965 – கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலசு நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1968 – பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசிப் பயணிகள் சேவையை நடத்தியது.
1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் கடைசித் தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டு வெளியேறினர்.
1975 – கிழக்குத் திமோர்: திமோர் சனநாயக ஒன்றியத்தின் புரட்சி, மற்றும் உள்நாட்டுக் கலகத்தை அடுத்து போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் மாரியோ லெமோசு பெரெசு தலைநகர் டிலியைக் கைவிட்டு வெளியேறினார்.
1979 – உக்ரைனில் இரண்டு ஏரோபுளொட் விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 178 பேரும் உயிரிழந்தனர்.
1982 – தோக்கியோவில் இருந்து ஒனலூலு நோக்கிச் சென்ற பான் ஆம் விமானத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 5 பேர் காயமடைந்தனர்.
1984 – தேர்தல் பரப்புரைக்காக வானொலி ஒன்றில் தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் “எனது சக அமெரிக்கர்களே, உருசியாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்” எனக் கூறினார்.
1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003 – ஆப்கானித்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ அமைப்பு அனுப்பியது.
2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர். 2009 இலேயே மீண்டும் திறக்கப்பட்டது.
2012 – கிழக்கு அசர்பைஜானில் தப்ரீசு நகருக்கருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 306 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் காயமடைந்தனர்.
2017 – எகிப்து, அலெக்சாந்திரியாவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1837 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரான்சின் 4வது அரசுத்தலைவர் (இ. 1894)
1897 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1968)
1912 – ஏவா அகுனெர்ட் உரோகுல்ப்சு, செருமானிய வானியலாளர் (இ. 1954)
1920 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (இ. 1997)
1923 – ரஞ்சன் ராய் டேனியல், இந்திய இயற்பியலாளர் (இ. 2005)
1937 – ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (இ. 1987)
1940 – கி. லோகநாதன், மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
1943 – பெர்வேஸ் முஷாரஃப், பாக்கித்தானின் 10வது அரசுத்தலைவர்
1950 – ஸ்டீவ் வாஸ்னியாக், ஆப்பிள் நிறுவனர்
1959 – தர்மரத்தினம் சிவராம், இலங்கை ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2005)
1961 – டேவிட் புரூக்சு, அமெரிக்க எழுத்தாளர்
1965 – வியோல டேவிஸ், அமெரிக்க நடிகை
1983 – கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஆத்திரேலிய நடிகர்
1985 – ஜாக்குலின் பெர்னாண்டஸ், பகுரைன்-இலங்கை நடிகை
இன்றைய தின இறப்புகள்
1253 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194)
1259 – மோங்கே கான், மொங்கோலியப் பேரரசர் (பி. 1208)
1747 – விஜய ராஜசிங்கன் – கண்டி நாயக்க மன்னன்
1854 – மாசிடோனியோ மெலோனி, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1798)
1880 – ராமச்சந்திரா, இந்திய கணிதவியலாளர், உருது மொழிப் பத்திரிகையாளர் (பி. 1821)
1890 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேய கருதினால் (பி. 1801)
1908 – குதிராம் போஸ், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1889)
1919 – ஆண்ட்ரூ கார்னேகி, இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1835)
1920 – ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை, சைவ அறிஞர் (பி. 1864)
1956 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (பி. 1912)
2011 – சி. வி. ராஜசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1927)
2011 – ஷெல்டன் ரணராஜா, இலங்கை அரசியல்வாதி (பி. 1926)
2012 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய மொழியியலாளர் (பி. 1928)
2014 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)
2018 – வி. சூ. நைப்பால், நோபல் பரிசு பெற்ற திரினிதாது-ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1932)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (சாட், பிரான்சிடம் இருந்து 1960)