இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ் டோனிஇருந்தார். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து டி20 மேட்ச்களில் விளையாடி வருகிறார். இவர் டி20 போட்டிகளில் 57 கேட்சுகள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளும், ஒரு நாள் போட்டிகளில் 321 கேட்சுகள் மற்றும் 123 ஸ்டம்பிங்களும், டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங்களும் பதிவு செய்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப்பிடம் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிகாக் என்று பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். அதாவது டோனி ஒரு மிகப்பெரிய வீரர். இருப்பினும் 21% கேட்சுகளை தவற விட்டுள்ளார். எல்லோரும் அதிக அளவில் கேட்ச் பிடித்த பட்டியலை மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் தவறவிட்ட கேட்சுகள் குறித்து யாரும் யோசிப்பதில்லை. ஒரு விக்கெட் கீப்பராக இருப்பவர் தான் தவறவிட்ட கேட்சுகள் குறித்தும் கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த 15 வருடங்களில் குயின்டன் டி காக் பேட்டிங், விக்கெட் கீப்பிங் போன்ற 3 வடிவங்களிலும் சிறந்தவராக இருந்தார். அதன் பிறகு மார்க் பவுச்சர் மற்றும் குமார் சங்ககாரா உள்ளிட்டோரும் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.