மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவருடன் சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயபுரம் பகுதியில் மீனவரான யோனாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயதனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது குரூஸ்புரம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வேகத்தடை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த சகாயதனியாவை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சகாயதனியா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.