Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிலக்கரி ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி  சாலையில்  கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை-திருச்சி சாலையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனசுந்தர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில்  புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே  வந்தபோது திடீரென மோகனசுந்தரத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி  அனைத்தும் சாலையில் கொட்டியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த அவரை  மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ‘

Categories

Tech |