Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” அறநிலையத்துறை ஆணையாளருக்கு அபராதம்…. இடைக்காலத்தடை விதித்த நீதிபதிகள்….!!!

இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சூளைப் பகுதியில் பிரபலமான சொக்கவேல் சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்த நபர்கள் நீண்ட காலமாக வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக சுகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குத்தகை பணம் தராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கூறினார். இந்த உத்தரவு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாக கருதி சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கு தலா ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். அதன் பிறகு உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் நீதிமன்றத்தில் ரூபாய் 50,000 அபராத தொகையை செலுத்தி விட்ட நிலையில், அறநிலையத்துறை ஆணையர் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி   அபராத தொகையை செலுத்துவதற்கு இடைக்கால உத்தரவு விதித்ததோடு, வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

Categories

Tech |