தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஆகஸ்ட் 11) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம்:
காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை சாலை, மின்னல், நரசிங்கபுரம், அன்வா்திகான்பேட்டை, குண்ணத்தூா், கூடலூா், குருவராஜப்பேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்டப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டம்:
குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் 11-ந் தேதி நடக்கிறது. இதனால் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்:
வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக.11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியாா்பட்டி, வெள்ளனம்பட்டி நாககோனனூா், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூா், மல்வாா்பட்டி, சிக்கிராம்பட்டி, சோனாபுதூா், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிபட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூா், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, உதவிச் செயற்பொறியாளா் சு. ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டம்:
சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் உசிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டனபட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிகல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்தகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், பாலமேடு நகர் பகுதிகள், அலங்காநல்லூர் நகர் பகுதிகள், சர்க்கரை ஆலை, பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.