ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை வருகை தந்தார். அந்த கோவிலுக்கு நடிகர் வடிவேலு வந்த தகவல் தெரிய வந்து அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.அப்போது அங்கு துப்புரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கியபடி வந்து வடிவேலுவின் காலில் விழுந்து வழங்கினார் .
உடனே அந்தப் பெண்ணை தூக்கி விட்டதுடன் நன்றாக இருங்கள் என்று அவரை வடிவேலு வாழ்த்தினார். அந்தப் பெண்ணை வாமா நீ தான் என் தங்கச்சி என்று கூறியபடி ஆறத் தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து வடிவேலு புறப்பட்டார். அவரின் இந்த செயலை ரசிகர்கள் நெகிழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.