70 களில் தொடக்கத்தில் அறிமுகமான நடிகை ஜெயசுதா. சார் பல முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்கள் அவர் நடித்த முக்கியமான கதாபாத்திரம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள ஜெயசுதா பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி இருந்த சமயத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட இவர், 2016ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன் பிறகு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இணைந்தார். தற்போது அரசியலில் இருந்து விலகியிருக்கும் இவர், பாஜகவில் ணையலாம் என்று கூறப்படுகிறது.