Categories
உலக செய்திகள்

சீனாவிடம் கடன்…. வங்காளதேச நிதி மந்திரி திடீர் எச்சரிக்கை….. என்ன காரணம்….????

ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார்.இதன் மூலம் எளிதாக சரக்கு போக்குவரத்து செய்யப்படுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தொழில் முனையங்கள் ஒன்றிணைக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வளரும் நாடுகளுக்கு சீனா கடனளித்து வருகிறது.

சீனா கடன் வழங்கும் முறையை வங்காளதேசத்தின் நிதி மந்திரி முஸ்தபா கமல் விமர்சித்துள்ளார் . இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சீனா தனது கடன்களை மதிப்பிடுவதற்கு மிகவும் வலுவான செயல் முறையை பின்பற்றுகின்றது. ஒரு திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன்பு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் .வளரும் நாடுகள் சீனாவின் இந்த திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |