நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா ஒரு ஹாய் சொல்லிவிட்டு, கட்டிப்பிடிப்பேன் என்று பேசியுள்ளார். மேலும், அவர் கையில் இருக்கும் டாட்டூ பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அது தன் திருமண நாள் என்றும் அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.