தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளன.
இந்நிலையில் அமீர்கானின் லால்சிங் சந்தா படத்தில் நடித்துள்ள நாக சைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் . அப்போது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாகசைதன்யா, ஒரு ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன் என்று பேசி உள்ளார் .மேலும் அவர் கையில் இருக்கும் டாட்டூ பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது அது தன் திருமண நாள் என்றும் அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.