திருச்சி, மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துவரங்குறிச்சி பகுதியில் 2 கண்டெய்னர் லாரிகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. போட்டாபோட்டியில் ஒரு கண்டெய்னர் லாரி அருகில் உள்ள இணைச்சாலையில் சென்ற சிமென்ட் லாரி மீது மோதியது. விபத்தில் இரு லாரிகளும் தீப்பிடித்ததில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மணிபால், கிளீனர் பட்டேல் உயிரிழந்தனர்.
Categories