Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும் வருத்தமும் அளிக்கிறது .கடந்த ஆட்சியில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டது காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்று சொன்னாலும் நாம் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் வியாபாரிகளும், கடைக்காரர்களும் போதை பொருளை விற்க மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும் . பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே போதைப் பொருள்கள் விற்பனையாகாமல் கண்காணிக்க வேண்டும் .

அனைத்து மாவட்ட நிர்வாகத்தினர் எல்லைக்குள் இப்பொருள்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் . போதைப் பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் போதைப்பொருள் விற்பவரின் ஒட்டுமொத்த சொத்துக்களும் முடக்கப்பட வேண்டும். போதை பொருள் தொடர்பான ரகசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரிவிக்கும் விதமாக தனியாக ஒரு கட்டணம் இல்லா தொலைபேசி எண் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |