சீனாவானது தன் யுவான்வாங் 5 எனும் ஆராய்சி கப்பலை இலங்கை நாட்டின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் 6 தினங்கள் நிறுத்தி செயற்கைக்கோள் குறித்த ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இவற்றிற்கு இலங்கை அரசும் ஒப்புதல் வழங்கியது. இதனிடையில் ஆராய்ச்சி கப்பல் என கூறுவது உண்மையில் ஒரு உளவு கப்பல் எனவும் அது அங்கு நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இலங்கை அரசிடம் இந்தியா தன் கவலையை வெளிப்படுத்தியது.
இதையடுத்து அந்த கப்பல் பயணத்தினை ரத்துசெய்யுமாறு சீனாவிடம், இலங்கை அரசானது தெரிவித்தது. இம்முடிவை மறு பரிசீலனை செய்வதற்கு இலங்கையை சீனா வலியுறுத்தியது. எனினும் இலங்கை அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி யுவான்வாங் 5 கப்பல் ஹம்பன் தொட்டா துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 11) காலை 9:30 மணிக்கு அந்த கப்பல் ஹம்பன்தொட்டா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.