நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல் சமீபத்தில் வெளியானது.அதாவது வருகின்ற நவம்பர் 30ம் தேதிக்குள் 12-வது தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது மொபைல் நம்பரை வைத்து பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளி நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை எத்தனை தவணை பணம் வந்துள்ளது எவ்வளவு வந்துள்ளது அடுத்த தவணை குறித்த தகவல் போன்ற பல்வேறு விவரங்களை விவசாயிகள் தங்களது மொபைல் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை பதிவிட்டு பார்த்துக் கொள்ளலாம்.மொபைல் நம்பரை வைத்து பார்க்கும் வசதி சமீபத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த வசதி தொடங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் இன்னும் நிறைய விவசாயிகள் இணையாமல் இருக்கின்றன.அவர்கள் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொது சேவை மையங்களில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற முடியும். மேலும் பிஎம் கிசான் திட்டத்தின் https://pmkisan.gov.inஎன்ற இணையதளத்தில் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.