இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கலாமா கூடாதா ? என்பது குறித்த விவாதம் என்பது நாடு முழுவதும் நடந்து வரக்கூடிய சூழலில் அரசியல் தளத்தில் மட்டும் பார்க்கப்பட்ட பேசப்பட்ட இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திலும் பேசப்பட்டு இருக்கின்றது. மிகவும் முக்கியமான கருத்துக்களை தாங்கிய விஷமாக மாறி இருக்கின்றது.
அஸ்வினி உப்பாத்தியா என்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது. அப்படி அவர்கள் வழங்கினார்கள் என்றால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த கட்சிக்கான அங்கீகத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
சில ஆண்டுகளாகவே இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக எடுக்கப்பட்டிருக்கின்றது. முதலாவதாக தேர்தல் ஆணையம் இந்த விகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் தனது தரப்பு கருத்துக்களை பிராமண பத்திரமாக தாக்கல் செய்திருந்தார்கள்.
அதே சூழலில் ஆம்.ஆத்.மி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இது அரசியல் கட்சிகளுடைய ஆட்சி, நடத்துபவர்களுடைய உரிமை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிடுவதற்கு எல்லாம் எதுவுமே இல்லை என சொல்லி மனுவை தாக்கல் செய்திருந்தார்கள். இப்படி காரசாரமான வாதம் பிரதிவாதங்கள் எல்லாம் வெறும் எழுத்துப்பூர்வமாக இருந்த நிலையில், இன்றைய நிலையில் நேரடியான வழக்கு விசாரணையை நடைபெற்றது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி இலவசங்கள் குறித்து தனது பார்வையை கருத்தாக கூறி இருக்கின்றார்; இவை எதுவும் உத்தரவு இல்லை. அவர்கள் பார்வையாக இருக்கின்றது. இலவசங்களும் சமூக நலத் திட்டங்களும் வெவேரானவ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், இலவசகளால் அரசு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும், இலவசத்தால் மின்சார துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கருத்து தெரிவித்திருக்கிறார்