Categories
அரசியல்

அன்று என்ஜினியராக இருந்தவர் இன்று போலீஸ் கமிஷனர்…. 2 முறை ஜனாதிபதி பதக்கம் வென்ற சங்கர் ஜிவால்…. வியக்க வைக்கும் பின்னணி….!!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து தலைமைச் செயலாளர்,சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட முக்கிய பதிவிகளுக்கு ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக ஏ.டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இவர் 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அதனை தொடர்ந்து சங்கர்ஜிவால் இன்ஜினியரிங் படித்தார். அது மட்டுமில்லாமல் இவருக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய் மொழியான குமானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

மத்தியப்போதைப் பொருள் தடுப்பு பிரிவான என்.சி.பி. திருச்சி போலீஸ் கமிஷனர், உளவு பிரிவில் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி, சிறப்பு அதிகாரி அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி. ஆகிய முக்கிய பதிவிகளில் பணியாற்றியவர். இதற்கிடையில் இவர் அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பிறகு தமிழக அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். இருமுறை ஜனாதிபதி பதக்கம் பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்ஜினியரிங் படிப்பை முடித்ததும் சிறிது காலம் நிறுவனங்களின் இன்ஜினியராக பணியாற்றினார். அதன் பிறகு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாணர். சென்னை நகரின் 107வது போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் எப்படி போலீஸ் கமிஷனராக தேர்வாணர் என்பதை பார்ப்போம்.

அதாவது அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படாமல் ஒரங்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர் சங்கர்ஜிவால். இதற்கிடையில் திமுக விசுவாசி ஐபிஎஸ் அதிகாரியாக கருதப்பட்ட இவருக்கு ஏடிஜிபி உளவுத்துறை அல்லது போலீஸ் கமிஷனர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி போலீஸ் கமிஷனர் பதவி கிடைத்திருக்கிறது. திமுக தலைமைக்கு வேண்டப்பட்டவராக கருதப்பட்டாலும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்க்கு இருக்கிறது. மேலும் சென்னை போலீஸ் பதவியை எதிர்பார்த்து ஏ.டி.ஜி.பி. ரவி மற்றும் சந்தீப்ராய் ரத்தோர் காத்திருந்தனர். ஆனால் கமிஷனர் வாய்ப்பு சங்கர்ஜிவாலுக்கு கிடைத்திருக்கிறது. அதனைப் போல தமிழக சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக தாமரைக்கண்ணன், உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Categories

Tech |