இந்தியராணுவத்தில் அதிகாரி பொறுப்பில் இருப்பது என்பது மதிக்கத்தக்க ஒன்றாகும். இராணுவத்தில் அதிகாரியாக தேசத்துக்கு சேவைபுரிய வேண்டும் என்பது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கனவாக உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் இந்தியராணுவத்தில் லெப்டினன்ட் பதவியிலுள்ள அதிகாரிகளாகச் சேர்ந்து, பிறகு கேப்டன், மேஜர், லெப்டினன்ட் கர்னல், கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஜெனரல் என பல்வேறு பட்டங்களை பெறுவார். இந்தியராணுவத்தில் பணிபுரிய விருப்பப்படுபவர்கள் joinindianarmy.nic.in எனும் இணையதளத்தின் உதவியுடன் அதிகாரி(அல்லது) ஜூனியர் கமிஷன்ட் ஆபீஸராக (JCO) அவரின் தகுதிகள், திறமையின் அடிப்படையில் பிற தர வரிசையில் சேர்ந்துக்கொள்ளலாம். இணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆர்வம் இருப்பவர்கள் இதில் சேர்ந்து பணிபுரிவதற்கான 10 வழிகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். மேலும் அதில் அதிகாரியாக சேருவதற்கு என்ன தகுதி வேண்டும்? மற்றும் வயது எவ்வளவு? என்பதை பற்றி பார்க்கலாம்.
நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி
இந்தியராணுவத்தில் 195 நபர்கள் இணைந்து வருடத்துக்கு 2 முறை 300 வேட்பாளர்களுக்கு NDA காலியிடங்களானது அறிவிக்கப்படும். அதாவது 10 மற்றும் +2 கல்வித்தகுதியுடன் 16.5 -19.5 வயது வரையுள்ள NDA ஆர்வலர் ஆவர்.
10 மற்றும் +2 தொழில் நுட்ப நுழைவுத்திட்டம்
ஆண்டுக்கு 2 முறை 85 காலி இடங்கள் வாயிலாக இவ்வகை நுழைவு அறிவிக்கப்படும். இவற்றிற்கு விண்ணப்பதாரர்கள் 16.5 -19.5 வயதுக்குள் இருக்க வேண்டும். அத்துடன் இயற்பியல், வேதியியல், கணிதம் (பிசிஎம்) போன்றவற்றில் 70 % மதிப்பெண்களுடன் 10, +2 தேர்ச்சி பெற்றிருக்கவும்.
ராணுவம் அகாடமி
இந்தியராணுவம் ஆண்டுக்கு 2 முறை 250 விண்ணப்பதாரர்களை வேலைக்கு அமர்த்துகிறது. விண்ணப்பதாரர்கள் 19 -24 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்கவும்.
ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (Non-Tech):
வருடத்திற்கு 2 முறை ஒரு பாடத்துக்கு 175 காலியிடங்கள் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 19-25 வயதுக்கு உட்பட்டவராகவும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகவும் இருத்தல் வேண்டும்.
ஷார்ட் சர்வீஸ் கமிஷன்
ஒரு பாடத்துக்கு 50 காலி இடங்கள் ஒரு ஆண்டுக்கு 2முறை அறிவிக்கப்படும். பின் விண்ணப்பிப்பதார் 19 -27 வயதிற்குள் இருத்தல் மற்றும் BE/BTech ஸ்ட்ரீம் ஆஃப் இன்ஜினியரிங்/B. ஆர்ச், எம்எஸ்சி கம்ப்யூட்டர் பட்டம் பெற்றிருக்கவும்.
NCC சிறப்பு அதிகாரி
ஒரு பாடத்துக்கு வருடத்துக்கு 2 முறை 50 காலியிடங்களுடன், NCC சிறப்பு வயது அளவு கோல் 19 -25 வருடங்கள் வரை கல்வித்தகுதியுடன் LLB / LLM உடன் பட்டப்படிப்பு 50 சதவீத மதிப்பெண்களுடன் மற்றும் 2 ஆண்டுகள் தேசிய கேடட் கார்ப்ஸில் பணியாற்றி இருக்க வேண்டும். (NCC) ‘C’ சான்றிதழ் தேர்வில் குறைந்தபட்சம் B கிரேடு கொண்ட மூத்தபிரிவு ராணுவம்.
TGCகல்வி (AEC)
இராணுவப் கல்வி படை நுழைவிற்கான தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு விண்ணப்பதாரர்கள் 23 -27 வயதுக்குள் இருத்தல் வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட பாடங்களில் 1-வது அல்லது 2-வது பிரிவில் MA / MSC படித்திருக்க வேண்டும்.
யுனிவர்சல் என்ட்ரி ஸ்கீம் (UES)
ஒரு பாடத்துக்கு 60 காலி இடங்களைக் கொண்ட இந்த நுழைவுக்கு விண்ணப்பதாரர்கள் 19 -25 வயது உடையவராக இருத்தல் வேண்டும். பொறியியல் பட்டப்படிப்பிலுள்ள மாணவர்களுக்கு 18 -24 வயது வரையிலும் வயது வரம்பு இருக்க வேண்டும்.
TGC (பொறியாளர்கள்)
இந்த பதவிகளுக்கு வயது வரம்பு 21 -27 வரையில் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் BE / B. Techஉடன் பொறியியல்/ B. ஆர்ச், MSc கணினி போன்றவற்றில் அறிவிக்கப்பட்ட ஸ்ட்ரீம்களில் வருடத்திற்கு 2 முறை ஆட்சேர்ப்பு நடைபெறும்.
JAG (Men & Women)
நீதிபதி அட்வகேட் ஜெனரல் நுழைவிற்கு விண்ணப்பதாரர்கள் 21 -27 வயது வரை இருத்தல் வேண்டும் மற்றும் 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்டப்பட்டதாரி (LLB), இந்திய/மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கவும்.