திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகா பெரியகுடி பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றை தொடங்கினார்கள். அந்த நேரத்தில் அதிக அழுத்தத்தின் காரணமாக அந்த கிணறு விபத்து ஏற்பட்டு, முற்றிலுமாக மூடப்பட்டது.
இந்த நிலையில கடந்த மாதத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அந்த கிணத்தை நாங்கள் மறுபடியும் சரி பண்ண போகின்றோம். சரி பண்ணுவதற்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு, அதன்படி கூட்டம் போட்டார்கள். இந்த கூட்டம் போட்டது தெரிந்துகொண்ட விவசாயிகள் ஏன் மூடப்பட்ட கிணற்றை மறுபடியும் ஆய்வு பண்ண வேண்டும் ? மறுபடியும் ஏன் அதன் பணிகள் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து, அந்த கூட்டமே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஓஎன்ஜிசி பணிகள் குறித்து மீண்டும் ஒரு கூட்டம் போட்டார்கள். விவசாயிகள் சங்கத்தில் பிரதிநிதிகள், மக்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.அப்போது ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் அந்த இடத்துல பணிகளை தொடங்குவதற்கு தான் முயற்சி செய்தது என விவசாய சங்கம் கூட்டத்தை விட்டு வெளியே நடப்பு செய்தார்கள்.
இந்த நிலையில இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியின் காயத்ரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் முக்கியமான சாராம்சம் என்னவென்றால்,பாதிக்கப்பட்ட இந்த கிணறு மூடப்பட்டுள்ளது. அந்த கிணறு திடீரென்று ஏதும் ஆகி விடக்கூடாது. அப்படிங்கிறதுக்காக ஓஎன்ஜிசி அந்த கிணற்றை நாங்கள் பராமரிக்கிறோம் என்று சொல்லி உள்ளார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகத்தினுடைய அனுமதி பெற்று, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த கிணற்றை முற்றிலுமாக மூட வேண்டும். அதே சமயத்துல அங்கு வேறு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு சொல்லி இருக்கிறார்கள்.