Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

Breaking: அடி குழாயுடன் சேர்த்து கால்வாய்: ஒப்பந்ததாரர் கைது …!!

வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மாநகராட்சி மண்டல உதவியாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டிருக்கிறார். வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் போது அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வாகனத்தோடு சேர்த்த போடப்பட்ட சாலை,  ஜிப்போடு போடப்பட்ட சாலை என வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஒரு பகுதியாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது அடி பம்புடன் சேர்த்து கட்டியது மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட புகாரில்  ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

Categories

Tech |