Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மாரியம்மன் கோயில் திருவிழா”…. பக்தியுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயில் திருவிழா 8- ஆம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் காலை அனுமந்தராயன்கோட்டை அருகேயுள்ள குடகனாற்று கரைக்கு பக்தர்கள் சென்றனர். இதையடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு, அங்கு இருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.

அதன்பின் குடங்களில் கொண்டுவந்த பாலை அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். அத்துடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. அடுத்ததாக அக்னி ட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்றவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நடந்தது. இதில் பெரும்பாலான பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இந்நிகழ்ச்சியில் பிள்ளையார்நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |