தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை வரை பெய்தது. அதேபோல் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கூடலூர் பஜார், தேவாலாவில் தலா 11செ.மீ., மேல் கூடலூர் 10 செ.மீ., குந்தா பாலம், அவலாஞ்சியில் தலா 6 செ.மீ., மேல் பவானி 4 செ.மீ., பந்தலூர், எமரால்டு தலா 3 செ.மீ., சோலையாறு 2 செ.மீ. மழை பெய்தது என வானிலை மையம் அறிவித்துள்ளது.