குமரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டை அருகே இளங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ் மகள் திவ்யா (20). இவர், நேற்று மாலை அறைக்குள் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பக்கத்துவீட்டைச் சேர்ந்த வாலிபர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். பக்கத்து வீட்டு வாலிபர் திவ்யாவை தொடர்ந்து துன்புறுத்துவதாக திவ்யாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.