சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே தாய்லாந்துக்கு பயணம் செய்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், முன்னாள் அதிபராக இருந்த கோட்டப்பய ராஜபக்ச சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருந்தார். இந்நிலையில் தற்போது சிங்கப்பூரிலிருந்து அவர், தாய்லாந்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விசா காலம் முடிந்ததால் சிங்கப்பூரிலிருந்து அவர் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.