Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. தகுதிகள் இதுதான்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு பெண்களின் சுயதொழில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது மகிளா உக்காளம் நிதி திட்டம் என்பதை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பெண் தொழில் முனைவோருக்கு பொருந்தும். தொழில் செய்ய விரும்பும் பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெற முடியும். சொந்தத் தொழில் தொடங்க விரும்புவோர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கிகள் தங்களுக்கு விருப்பமான வட்டி விகிதத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்.புதிதாக தொழில் தொடங்குபவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே தொழில் செய்து வரும் பெண்களும் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த கடன் உதவி பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த கடனை 10 வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். வணிகத்தில் சரியாக 51% பங்கு இருக்க வேண்டும். MSME வர்த்தகம் மற்றும் உற்பத்தி வணிகம் செய்யப்பட வேண்டும் . முதலீடு 5 லட்சத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது.ஆட்டோ ரிப்பேரிங் மற்றும் சர்வீஸ் சென்டர், பியூட்டி பார்லர், கேபிள் டிவி நெட்வொர்க், கேன்டீன், உணவகம், கணினிமயமாக்கப்பட்ட டெஸ்க்டாப் பப்ளிஷிங், சைபர் கஃபே, போன் பூத், சலவை, மொபைல் ரிப்பேரிங், போட்டோ காப்பி சென்டர், டிவி ரிப்பேரிங், சாலை போக்குவரத்து ஆபரேட்டர்கள், சலூன், தையல், டைப்பிங் மா , விவசாய உபகரணங்கள் போன்ற பல தொழில்களை நீங்கள் தொடங்கலாம்.

Categories

Tech |