பிரபலமான நடிகரின் படம் நிதி நெருக்கடியால் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென தனி முத்திரையை பதித்தார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென தயாரிப்பாளருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நிதி நெருக்கடி சரியான பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.