Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கி….. பானிபூரி வியாபாரி உடல்நசுங்கி மரணம்….. திருவள்ளூர் அருகே கோர விபத்து….!!

திருவள்ளூர் அருகே பானிபூரி வியாபாரி பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை அடுத்த மணலிபுதுநகரை  சேர்ந்தவர் பர்வீன். இவர் வடமாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இவர் மணலி புதுநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் பானிபூரி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்க நேற்றையதினம் மணலி புதுநகரில் இருந்து மாதவரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மீஞ்சூரிலிருந்து பெரம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது இரு சக்கர வாகனத்தின்  மீது மோத நிலை தடுமாறிய அவர் கீழே விழ அவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |