தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் ஜூஸ் – 2 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 2 கப்
இஞ்சி ஜூஸ் – ஒரு ஸ்பூன்
சில் சோடா – 4 கிளாஸ்
கமலா ஆரஞ்சு – அரை கப்
ஆப்பிள் துருவல் – அரை கப்
பைனாப்பிள் – அரைக் கப்
சர்க்கரை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை போட்டுக் கொள்ளவும். பின் பைனாப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், இஞ்சி சாறு, இவற்றை கலக்கவும், பின் அதனுடன் சில் சோடா சேர்த்து குலுக்கவும்.
இறுதியில் ஆப்பிள் துண்டுகள் ,பைனாப்பிள் துண்டுகள் சர்க்கரை தேவைக்கேற்ப, உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும். குலுகுலு ஃப்ரூட்ஸ் ஃப்ரூட் மிக்ஸ் தயார்.