மேஷம் ராசி அன்பர்களே…! சுற்றுச்சூழலை உணர்ந்து பேசுவது நல்லது.
தொழிலில் கூடுதல் கவனம் வேண்டும். பண வரவு மிதமாக இருக்கும். உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குழந்தைகளின் கல்வி பற்றிய அக்கறை உண்டாகும். காதல் விஷயத்தில் கவனம் வேண்டும். பெண்கள் பாதுகாப்பு குறைவான இடத்திற்கு செல்லக்கூடாது. மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை உண்டாகும்.
உயர்கல்வில் முன்னேற்றமான சூழல் இருக்கும். நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று அம்மன் வழிபாடு மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: ஏழு மட்டும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மட்டும் சிவப்பு நிறம்.