Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இந்நிலையில் பூவனநாத சுவாமி மற்றும் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து மார்கெட் வியாபாரிகள் சார்பில் சாமி சன்னதி முன்புள்ள நந்தியம் பெருமாளுக்கு காய்கறிகள் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் கோவில் அறங்காவலர் திருப்பதி ராஜா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |