கல்வி அலுவலர் சந்தோஷ் பள்ளியில் ஆய்வு செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர், கல்வி அலுவலர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட கல்வியாளர் சந்தோஷ் பள்ளியில் அமைந்துள்ள கை கழுவும் இடம் , மலர் மூலிகை தோட்டம், குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து பள்ளியை சிறப்பாக நடத்தி வரும் தலைமை ஆசிரியர் தாமரை செல்வியை பாராட்டியுள்ளார்.