Categories
அரசியல் மாநில செய்திகள்

நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரமில்லை..! அரக்க குணம் கொண்ட ஓபிஎஸ்… தாறுமாறாக விமர்சித்த ஈபிஎஸ் ..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடு சென்று உதவி செய்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் பார்க்கவில்லை, அமைச்சர்களும் பார்க்கவில்லை அப்படிப்பட்ட அவலநிலை தமிழகத்தில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மட்டுமல்ல இன்றைக்கு அனைத்திந்திய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலமாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் தப்பு கணக்கு போடுகிறார்.

நம்மிடத்தில் ஒருவர் இருந்தார். யார் என்று உங்களுக்கு தெரியும் ? எனக்கு முன்னாலே திண்டுக்கல் சீனிவாசன் அவர்களும், விஸ்வநாதன் தெரிவித்தார்கள். நம்முடைய இயக்கத்தில் இருந்து இன்றைக்கு பல்வேறு சுகத்தை அனுபவித்து, பதவிகளை பெற்று அப்படிப்பட்டவர், பதவி வெறியின் காரணமாக பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் கொடுக்கப்பட்ட அந்த தலைமை கழகம்..  இன்றைக்கு நாம் கோவிலாக வணங்கி கொண்டிருக்கிறோம்.

அந்த தலைமை கழகத்தை,  இந்த தொண்டர்களுக்கு விட்டு சென்றிருக்கிறார்கள். அது எனக்கோ , மேடையில் இருக்கின்றவர்களோ, ஓபிஎஸ்கோ சொந்தமல்ல. உங்களுக்கு சொந்தம். தொண்டர்களின் சொத்து, பதவி என்றால் அந்த அலுவலகத்தில் போய் அமர்ந்து பணி செய்யலாம்; அதுதான் எங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு. ஆனால் அந்த சொத்தை பொறுத்தவரைக்கும் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொடுக்கப்பட்ட சொத்து, தொண்டர்கள் சொத்து.

அந்த ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைக்கு கோவிலாக பாவித்து கொண்டிருக்கின்ற அந்த கட்டிடத்தில் பிரதான கேட்டை உடைத்து, அங்கு இருக்கின்ற பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் உடைய பெயரே….  எம்.ஜி.ஆர் மாளிகை என்று இருக்கும். அதைக்கூட ஈரம் நெஞ்சம் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள்…  தங்கள் கைகளால், காலால் உடைத்து அந்த கட்டடத்திற்குள் நுழைகின்றார்கள் என ஓபிஎஸ்ஸை சரமாரியாக விமர்சித்தார்.

Categories

Tech |