கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியரை இன்ஸ்டாகிராமின் புகைப்படங்களை பதிவிட்டதால், பணியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா, செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில உதவிப் பேராசிரியை ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஸ்விம் ஸ்யுட் எனப்படும் பிகினி வகை உடை அணிந்து சர்ச்சைக்குறிய புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும்படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது ‘பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்’ என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 வயதான பேராசிரியை கூறியுள்ளார். இரண்டு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியையான, தன்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது, பெரும் பாலியல் துன்புறுத்தல் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. உதவி பேராசிரியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளது.