Categories
அரசியல்

அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்கள்….. நம்ம மக்கள் என்ன நினைக்கீறாங்க….? இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!!

அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்களால் மக்கள் மனதில் எழும் கேள்விகள் குறித்து பார்க்கலாம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கடந்த 8 வருடங்களில் அந்நிய செலாவணி ரூபாய் 50 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது. இந்த பணம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு பொதுமக்கள் என்ன நினைக்கிறாங்க அப்படின்னா, நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். கடந்த 8 வருஷத்துல பெட்ரோல், டீசல் விலை டபுள் ஆகிட்டே இருக்கே‌. இத பத்தி மன்கி பாத் நிகழ்ச்சியில் சொல்லுவீங்களா மோடி ஜி.

அதன் பிறகு வி.கே சசிகலா அவர்கள் அதிமுகவின் நிலவும் குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என்று கூறியுள்ளார். இதுக்கு மக்கள் என்ன நினைக்கிறாங்க அப்படின்னா, அம்மா ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தர்மயுத்தம் செய்த ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைதிப்படை அமாவாசை ரேஞ்சில உங்க கிட்டயே அரசியல் செஞ்ச எடப்பாடியையும் நீங்க விட்டுக் கொடுக்கல. ஆனா 2 பேரையும் விட்டுக் கொடுக்காத நீங்க திமுக மேல பழி போடுறீங்க பாருங்க அங்க தான் நிக்கிறீங்க மேடம்.

குஜராத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளனர். இந்த பணம் இலவசம் அல்ல என்றும், மக்களின் பணம் மக்களுக்கே செல்கிறது என்றும், வங்கிக்கு செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதுக்கு நம்ம மக்கள் என்ன நினைக்கிறாங்கனா. ரொம்ப சந்தோஷம். ஆனா பொம்பள புள்ளைகளுக்கு மட்டும் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்கீங்க. இந்த ஆயிரம் ரூபாய் பசங்களுக்கும் கிடைச்சா நல்லா இருக்கும். அவங்க மட்டும் என்ன பாவம் பண்ணாங்க.

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கம்யூனிஸ்ட் காரர்களுக்கு வேலை இல்லை என்றும், திமுக தரும் ஆக்சிஜன் சிலிண்டரை கையில் பிடித்துக் கொண்டு மக்கள் உயிர் வாழ்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இதுக்கு மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா. அதிமுக கட்சிக்கொடுத்த ஆக்சிஜனில் தான் கடந்த வருடம் தேர்தலில் நாலு சீட்டு ஜெயிச்சீங்க. பாத்துக்கோங்க, பதிலுக்கு அவங்களும் கேட்டுட போறாங்க.

Categories

Tech |