தென் சென்னை வடக்கு – மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நேற்று மொத்தமாக பல பொறுப்புகள் நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்தது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், எதிர்காலத்தில்.. இன்னும் கொஞ்ச காலத்தில் ஓபிஎஸ் அவர்களுடைய உழைப்பும், நியாயம், நீதி, நேர்மை, சத்திய தர்மம், என்றைக்கும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஓபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்துள்ளோம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கி, புரட்சித்தலைவி அம்மா கட்டி காத்த இந்த இயக்கத்தை ஐயா ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் நாங்கள் கட்டி காப்போம்.
திரு ஓ பி எஸ் அவர்களை சந்தித்து எங்களுடைய ஆதரவை தெரிவிக்க தான் வந்திருக்கிறோம் மற்றபடி இன்னும் எங்களுக்கு எந்தவிதமான ஒரு வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. ஓபிஎஸ் அவர்கள் எந்த ஒரு கட்டளையை இடுகிறார்களோ அதை மாவட்ட கழக செயலாளர் எங்களுக்கு தெரிவிப்பார்கள்.
அதன் அடிப்படையிலே அண்ணா நகர் பகுதியும், டி நகர் பகுதியும் உள்ளடக்கியுள்ள தென்சென்னை வடக்கு – மேற்கு மாவட்டத்தில் இருக்கின்ற செயல்படுவோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் முதன்மையான மாவட்டமாக ஓபிஎஸ் ஐயா அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக வலதுகரமாக இருந்து பணியாற்றுவோம் என தெரிவித்தார்.