காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல், எடப்பாடியை சரமாரியாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக அவர் பேசும் போது, மாவட்ட செயலாளர்கள் நாங்கள் செய்வதையே விமர்சிக்கிறார்கள். ஒரு பெண் என்பதால் இவர்கள் விமர்சனம் செய்தால் அடங்கிடுவார்கள் என்று எவ்வளவோ செய்தார்கள், நான் எல்லாத்தையும் மீறி தான் இன்றைக்கு வந்துள்ளேன்.
ஓபிஎஸ் உடைய ஆதரவாளர்கள் காஞ்சிபுரத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள், காஞ்சிபுரம் அய்யாவுடைய கோட்டையாவது விரைவில்…. கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மட்டும்தான், நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா மட்டும்தான், புரட்சித்தலைவி புரட்சித்தலைவர் எம்ஜிஇஆர் கொண்டு வந்த ஆஇஅதிமுகவே யாராலயும் அழிக்க முடியாது.
அறிஞர் அண்ணாவிற்கு பிறகு புரட்சி தலைவர், அவருக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா, அதற்குப் பின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மட்டும்தான். அவரால் மட்டும்தான் கழகத்தை கட்டிக் காக்க முடியும். கண்டிப்பாக சிலுவம்பாளையம் சேலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி உங்களால் காசு கொடுத்து மட்டும்தான் மக்களைக் கூட்ட முடியும், எங்களை மாதிரி தொண்டர்களை ஒவ்வொரு போதும் உங்கள் பின்னால் நிற்க மாட்டோம்.
எங்களுக்கு ஓபிஎஸ் தான் எல்லாமே. கழகத்தை கட்டி காப்பது ஐயாவால் மட்டும்தான் முடியும், அவர்களுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். காஞ்சிபுரத்தில் முழு ஆதரவு இருக்கிறது. மற்றவர்கள் காசு கொடுத்து பேசுகிறார்கள் என்பதற்காக நீங்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் விமர்சிப்பது சும்மா ? நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் உண்மையான தொண்டர்கள் எல்லாமே கொந்தளிச்சு போய் இருக்கிறார்கள். காஞ்சிபுரத்தில் எல்லோரும் ஐயா தலைமையில் வந்து இணைவார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் திரு பன்னீர்செல்வம் தான் என தெரிவித்தார்.