Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்கிழிய பேசும் எதிர்க்கட்சிகள்..! எதுக்கு இங்கு வரவில்லை ?… எடப்பாடி ”எதை சொன்னாரு” தெரியுமா ?

அதிமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 14 மாத கால ஆட்சி ஒரு இருண்ட கால ஆட்சியாக பார்க்கின்றோம். எல்லாத் துறைகளிலும் லஞ்சம், லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களுக்கு லஞ்சம் வாங்குவது தான் வேலை, வேற எந்த வேலைகளும் செய்வதில்லை. காலையில் எழுந்தால் மாலை வரை எந்தந்த துறையில் எவ்வளவு பணம் வரும்.

அதை கணக்கு போட்டு வாங்கி கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து பெயரை வாங்கி, பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்களை பற்றி சிந்திக்கவில்லை, ஆட்சி உருவாக்கிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பரக்காண குடும்பமாக மாறுவதற்கு இந்த ஆட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்…

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 10ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி, புரட்சி தலைவி அம்மா 15 காலம் சிறப்பான ஆட்சி, இருவரின் வழியிலே மாண்புமிகு அம்மாவுடைய அரசு நான்கு ஆண்டு இரண்டு மாத கால ஆட்சி கிட்டத்தட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மண்ணிலே 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி.

காவேரி கரையோரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, எந்த கட்சி சென்று பார்த்தது. இன்று வாய் கிழிய பேசுகிறார்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், எந்த கட்சியாவது மக்களை பார்த்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்களா? இன்றைக்கு ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியில் இருக்கின்ற ஏழைகளை சிந்தித்துப் பார்த்து அவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி என தெரிவித்தார்.

Categories

Tech |