தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 12) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருமானூர் ஒன்றியத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேல ராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனை குறிச்சி, சாத்தமங்களம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே அவனியாபுரம் துணைமின்நிலையத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் எம். எம். சி. காலனி உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் 12ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை பெரியசாமிநகர், திருப்பதி நகர், சி. ஏ. எஸ். நகர், சொக்கு நகர், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜெ. பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம். கே. எம். நகர், எஸ். கே. ஆர். நகர், முல்லை நகர், ராஜீவ் காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரதவீதி, எம். எம். சி. காலனி, ஜெயபாரத் சிட்டி, பை பாஸ்ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள், பிரியங்கா அவென்யூ, அர்ஜூனாநகர், கிளாட்வே கிரீன் சிட்டி, வ. உ. சி. தெரு, பாராசக்தி நகர், காவேரிநகர் 1 முதல் 7 வரை, ஆறுமுக நகர் 1, 2-வது தெருக்கள், ஜவகர் நகர், ஸ்ரீராம்நகர், எம். எம். சிட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சங்ககிரி டவுன், ஐவேலி, அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையச்செட்டிபாளையம், இருகாலூர், ஆவரங்கம்பாளையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்பு குட்டை, ஒலக்கசின்னானூர், தங்காயூர், வைகுந்தம், சங்ககிரி ரெயில் நிலையம், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.