Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு….. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் பட்டியல்களை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி,அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவிவாரியான தேர்ந்தோர் பட்டியலை கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி தயார் செய்ய வேண்டும்.

அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும் போது பதவி உயர்வுக்கு தேவையான உரிய கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவுக்குள் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஐந்து நபர்கள் என்ற விகிதத்தில் தான் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பிறகு கூடுதல் பட்டியல் எக்காரணம் கொண்டும் தயாரிக்கப்படக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |