சென்னை திருவல்லிக்கேணி சாலையில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கடந்த புதன்கிழமை கிடந்த சணல் பையில் இருந்த ஒரு பொருளை நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டு இருந்தன.அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆண் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குளித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
அந்த விசாரணையில் குழந்தை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா அரசு மருத்துவமனையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவரின் மனைவி கவிதாவுக்கு பிறந்ததாக தெரியவந்துள்ளது. பிறகு கவிதாவை விசாரணை செய்ததில் அந்த குழந்தை இறந்தே பிறந்ததாகவும் குழந்தையை இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்வதற்காக கணவரிடம் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தனுஷ் அந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனுஷின் விசாரணை நடத்திய போது அடக்கம் செய்ய பணம் இல்லாததால் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டதாக மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.