சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கிளியனூர் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமுருகன் என்ற மகன் உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என பாலமுருகன் சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு செய்த மகளிர் காவல்துறையினர் பாலமுருகனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.