ஆப்பிரிக்கா நாட்டில் ஒன்று மாலி. இங்கு ஜனநாயக ரீதியில் அமைந்த அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் ஆட்சி செய்கிறது. இந்த நாட்டில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆதரவினைப் பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் சாஹல் பிராந்தியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது. அவர்களை ஒழிக்கிற நடவடிக்கைகளில் அந்த நாட்டின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்க முடியாமல் ராணுவமும் திணறி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை டெசிட் நகரில் ராணுவ வீரர்களை கூறி வைத்து டிரோன்கள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி அதிபயங்கர தாக்குதல்களை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர்.
இந்த தாக்குதலில் 42 ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டது. மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த தாக்குதல்களை நடத்திய பானையை வைத்து அவற்றை கிரேட்டர் சகாரா பிராந்திய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் நடத்தி இருக்கலாம் என்று ஊகிப்பதாக மாலி அரசு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் ராணுவ வீரர்களும் பல மணி நேரம் மோதினர். இந்த மோதலால் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் அங்கிருந்து தகவல் தெரிவிக்கின்றன.