யானைகள் லாரியை வழிமறித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கடந்து செல்வது வழக்கம். இந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்கள் கரும்புகளை சாலையோரம் போட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக கரும்புகளை சாப்பிடுவதற்காக யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் உலா வருகின்றது.
இந்நிலையில் நேற்று தாளவாடி பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கரும்புகளை ஏற்றுக்கொண்டு கரும்பு ஆலைக்கு சென்றது. இந்த லாரியை குட்டிகளுடன் சென்ற யானை கூட்டம் நிறுத்தியது. அதன்பிறகு லாரியில் இருந்த கருப்புகளை யானைகள் சாப்பிட ஆரம்பித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையிலே முடங்கியது. மேலும் லாரி ஓட்டுநர் வாகனத்தில் இருந்த கரும்பை எடுத்து சாலை ஓரமாக வீசியதால் யானைகள் கலைந்து சென்றது. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் சரியாகி வாகனங்கள் சென்றது.