ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமான ஒன்று. இந்த தொடர் வந்ததுக்கு பின் இதே போன்று தொடரை சில நாடுகளும் நடத்தி வருகின்றது. தற்போது அந்த வரிசையில் தென்ஆப்பிரிக்காவும் இணைந்துள்ளது. தென்னாபிரிக்காவில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் டி20 போட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தென்னாபிரிக்க நாட்டில் உள்ள நகரங்களை தலைமையாகக் கொண்டு 6 அணிகள் மொத்தம் இந்த தொடரில் பங்கேற்கிறது.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் இந்த தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐபில் அணிகளின் உரிமையாளர்களே வாங்கி இருக்கின்றனர். எனவே தென் ஆப்பிரிக்கா டி20 லீக் கிரிக்கெட் தொடரும் அனைவரது கவனத்தையும் பெரிய அளவில் கவரும் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. அந்த 6 அணிகளில் ஒன்றான ஜோகன்னஸ்பர்க் நகரை தலைமையாகக் கொண்ட அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கி இருக்கிறது.
இந்த அணிக்கு ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்று பெயரிடப்போவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல இந்த அணிக்கு ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் டூ பிளெஸ்ஸிஸ் இந்த அணியின் நட்சத்திர வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.. மேலும் சில வீரர்களையும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி வருகிறது.. இந்த அணியில் இம்ரான் தாஹிர், பிரிட்டோரியஸ், பிராவோ உள்ளிட்ட சிஎஸ்கே அணியில் விளையாடிய பல வீரர்களும் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த அணியில் அனுபவம் வாய்ந்த டூ பிளெஸ்ஸிஸ் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அணி ஆலோசகராக தோனியும், பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளம்மிங்கும் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.. ஐபிஎல் அணியில் சென்னை அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி அந்த அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை கொடுத்து வந்த டூ பிளெஸ்ஸிஸ் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் கேப்டனாக தலைமையேற்று விளையாடினார்… ஏலத்தில் சிஎஸ்கே இவரை தவிர விட்டுவிட்டதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்..
மேலும் இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும்.. ஏனென்றால் பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக ஆடி வந்த அவர் திடீரென பெங்களூரு அணிக்கு செல்லப்பட்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. பெங்களூர் அணிக்கு அவர் சென்றாலும் அந்த அணியில் அவர் கேப்டனாக சிறப்பாக ஆடி வருவதை சிஎஸ்கே ரசிகர்கள் கண்டுகளித்தார்கள் என்பதுதான் உண்மை.. இந்நிலையில் தற்போது சென்னை அணி நிர்வாகம் டூ பிளெஸ்ஸிஸ் மீண்டும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து விட்டார் என்ற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
A yellove’ly reunion. Join us in welcoming back Fafulous du Plessis. 🥳💛#WhistlePodu #FafDuPlesis @faf1307 pic.twitter.com/AtCVbO46wg
— Joburg Superfans (@joburgsuperfans) August 11, 2022