முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பி.கே.புரம் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லதா திருவலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் லதாவிடம் முகவரி கேட்டுள்ளார்.
இதனையடுத்து முகவரி சொல்ல முயன்ற போது திடீரென அந்த வாலிபர் லதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து லதா திருவலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.