புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்தில் வெளியிட மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.
விரைவில் புழக்கத்துக்கு வரும் அந்த ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு மற்றும் பச்சை உட்பட பல வண்ணங்களுடன் கூடிய சிறப்பு வாய்ந்த ரூபாய் நோட்டாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9.7 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 6.3 சென்டி மீட்டர் அகலத்தில் புதிய ஒரு ரூபாய் நோட்டு இருக்கும். 100% பருத்தி காகிதத்தில் 110 மைக்ரான் தடிமன் மற்றும் 90 ஜிஎஸ்எம் எடை கொண்டதாக அந்த நோட்டு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நாட்டில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது . அதற்காக ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறம், எடை, வடிவம் என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய பரிணாமத்தில் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.